உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள்

2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள்

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்தவர் ஷங்கர். தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர். தமிழில் பெயரெடுத்தவர் ஹிந்தியில் 2001ல் வெளியான 'நாயக்' படம் மூலம் அறிமுகமானார். 'முதல்வன்' படத்தின் ரீமேக்காக வந்த அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. இந்த வருட சங்கராந்திக்கு வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். அந்தப் படமும் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. தமிழைத் தவிர வேறு மொழிகளுக்குச் சென்றது அவருக்கு ராசியாக அமையவில்லை.

தெலுங்கில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. அவர் தமிழ், தெலுங்கில் இயக்கிய 'குபேரா' படம் இந்த ஆண்டில் வெளிவந்தது.

தனுஷ், ரஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் தெலுங்கு, தமிழில் உருவான 'குபேரா' படம் ஜுன் 20ம் தேதி தேதி வெளியானது. தெலுங்கில் வெற்றி பெற்றாலும் தமிழில் பெரும் தோல்வியைத் தழுவியது. படத்தில் கதைக்களம் உட்பட தெலுங்கு வாடை அதிமாக இருந்ததே அதற்குக் காரணம். இப்படம் மூலம் தமிழுக்கு வந்து தடம் பதிக்கலாம் என நினைத்த சேகர் கம்முலாவுக்கு இங்கு தோல்வி கிடைத்தது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் ஒரு பேட்டியில் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இப்படத்தை இயக்கியது தவறு என்றார்.

மொழி மாறி இயக்கிய இந்த இரண்டு முக்கிய இயக்குனர்களும் அவர்களது படங்களில் தோல்வியை சந்திக்க நேர்ந்துவிட்டது. இனி அவர்கள் அப்படிச் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !