பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 9 days ago
மலையாளத்தில் குறிப்பிடத்தக்க இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் உன்னி முகுந்தன். கடந்த வருடங்களில் மாளிகைப்புறம், மேப்படியான், மார்கோ மற்றும் தமிழில் கருடன் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அவர் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக இருக்கும் மா வந்தே என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இதில் பிரதமர் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கேரளாவில் துவங்கியுள்ளது. இந்த படத்தை கிரந்தி குமார் சி.ஹெச் என்பவர் இயக்குகிறார்.