உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம்

ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம்

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இந்த படம் பொங்கலை யொட்டி வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் வருகிற 27ம் தேதி மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மேலும், விஜய் படங்களின் இசை விழா என்றாலே அவரது ரசிகர்கள் பெரிய அளவில் படையெடுப்பார்கள். அதிலும் தற்போது அவர் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் கட்சி கொடி, கட்சியின் டீசர்ட், டவல் போட்டபடி வருவார்கள். அதோடு, யாரேனும் அரசியல் பேசினால் அரசியல் நிகழ்ச்சி போல் ஆகி விடும் என்பதால், மலேசியா அரசு, விஜயின் ஜனநாயகன் படக்குழுவுக்கு ஒரு தடை உத்தரவு போட்டுள்ளது. அதில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா சினிமா சார்ந்த நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். இந்த விழாவில் யாரும் அரசியல் பேசக்கூடாது. முக்கியமாக விழாவிற்கு வரும் ரசிகர்கள் கட்சிக்கொடி, கட்சியின் டிசர்ட் அணிந்து வரக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசிய அரசு ஜனநாயகன் படக்குழுவிற்கு தடை உத்தரவு போட்டிருப்பதாக கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ஆறுமுகம்
2025-12-24 16:19:50

மலேஷியர்கள் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள் அந்த அளவுக்கு சினிமா பைத்தியம் கிடையாது. இந்தியாவில் இருந்து இங்கு பணி புரியும் நபர்களால் தான் பிரச்னை ஏற்படும் ஆகவே எங்கள் காவல் துறை எச்சரிகை விடுத்து உள்ளது.