உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல்

உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல்

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என கொண்டாடப்பட்டவர் மறைந்த கே.பாலசந்தர். ரஜினி, கமல் எனும் இரு ஆளுமைகளை தமிழ் சினிமாவிற்கு தந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. கமலின் ஆஸ்தான குருவில் பாலசந்தர் முக்கியமானவர். இயக்குனர் கே பாலசந்தரின் நினைவு தினம் இன்று.

இதையொட்டி நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் பாலச்சந்தர், அவரது தோழர் நாகேஷிற்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல. இந்த இயக்குனர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம் என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !