ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ஜெயிலர். இப்படம் 650 கோடி வசூலித்தது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சுனில், யோகி பாபு, தமன்னா, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த நிலையில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட சிலர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்கள். தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்கள்.
சிவராஜ்குமார் கூறுகையில், ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் என்னுடைய கேரக்டர் நீளம் அதிகமாக இருக்கும். இப்படத்தில் நடிக்க மொத்தம் நான்கு நாட்கள் கால்சீட் கொடுத்துள்ள நிலையில் ஒருநாள் மட்டுமே நடித்துள்ளேன். மீதமுள்ள மூன்று நாட்கள் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. அதோடு கன்னடம், தமிழ் சினிமாவுக்கு இடையே நல்லதொரு நட்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இது போன்ற கெஸ்ட் ரோல்களில் தான் நடிப்பதாகவும் கூறுகிறார் சிவராஜ்குமார்.