வாசகர்கள் கருத்துகள் (1)
அதனால் என்ன நஷ்டம்? மற்றவர்களுக்கு?
பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவருக்கு வயது 69 என்று மீடியாக்களில் செய்தி வெளியானது. பல்வேறு வலைத்தளங்களிலும் அவருடைய பிறந்த வருடம் என 1956 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர் உண்மையான வயது 69 அல்ல, கிட்டத்தட்ட 75 இருக்கும் என்று சோசியல் மீடியாவில் ஒரு விவாதம் கிளம்பியது. இதனை தொடர்ந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரது வயது 74 அல்லது 75 இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதற்கு முதல் ஆதாரமாக சமீபத்தில் அவரது மறைவுக்காக நடிகர் ரஜினிகாந்த் தான் வெளியிட்ட ஆடியோ இரங்கல் பதிவில் என்னுடன் திரைப்பட கல்லூரியில் கிளாஸ்மேட்டாக இருந்தவர் சீனிவாசன் என்று குறிப்பிட்டு இருந்தார். ரஜினிகாந்த் திரைப்பட கல்லூரியில் சேரும்போது அவருக்கு 23 முதல் 24 வயது தான். இப்போது அவருக்கு வயது 75. அதனால் சீனிவாசனுக்கும் கிட்டத்தட்ட அதே வயது தான் இருக்கும் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.
அதேபோல கேரளாவில் அவருடன் கல்லூரியில் படித்தவர்கள் கூறும்போது அவர் 1968லேயே கல்லூரியில் சேர்ந்து 1971 மார்ச்சில் படிப்பை முடித்தார் என்று கூறியுள்ளார்கள். அதன்படி 1956ல் அவர் பிறந்திருந்தால் எப்படி 15 வயதில் கல்லூரி படிப்பை முடித்திருக்க முடியும் என்ற லாஜிக்கான இன்னொரு கேள்வியையும் முன்வைக்கின்றனர்.
திரை உலகைச் சேர்ந்த சீனிவாசனின் நண்பர்கள் சிலர் இப்படி அவரது வயது, பிறந்த வருடம் வலைதள பக்கங்களில் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று முன்பே அவரிடம் சொன்னபோது, “இருந்து விட்டு போகட்டும்.. இப்படியாவது நான்கு ஐந்து வயது குறைகிறதே என்று சந்தோஷப்பட்டு கொள்கிறேன்” என்று காமெடியாக கூறுவாராம். அந்த வகையில் அவர் கல்லூரி படிப்பை முடித்ததை கணக்கில் கொண்டு பார்க்கும்போது அவரது வயது சுமார் 75 என்பது உறுதியாகிறது.
அதனால் என்ன நஷ்டம்? மற்றவர்களுக்கு?