மலையாள நடிகை பார்வதி கடந்த வருடம் தங்கலான், உள்ளொழுக்கு உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்திருந்தார். ஆனால் ஆச்சரியமாக இந்த வருடம் அவரது நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதேசமயம் அடுத்த வருடம் வெளியாகும் விதமாக பிரதம திருஷ்த்ய குற்றக்கார் மற்றும் ஐ நோபடி ஆகிய படங்கள் அவரது நடிப்பில் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தனது 2025ம் வருடம் எப்படி கடந்தது என்பதை கூறும் விதமாக தான் மோட்டார் சைக்கிள் பயணம் செய்யும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்வதி.
நெடுஞ்சாலையில் அவர் கம்பீரமான ஒரு இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வதும், ஒட்டும்போதே எழுந்து நின்றபடி அதில் சாகசம் செய்வதும் பார்ப்பதற்கே ஆச்சரியமாக உள்ளது. இதுகுறித்து பார்வதி கூறும்போது, “பைக்கர்ஸ் ஆக விரும்பும் பெண்களை அவர்களது கனவை நிறைவேற்ற உறுதுணையாக நிற்கும் சிஆர்எப் உமன் ஆப் வீல்ஸ் அமைப்பின் பெருந்தன்மைக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.