முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வரும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக அவர் நடித்துள்ள மன சங்கர வர பிரசாத் காரு திரைப்படம் ஜனவரி 12ல் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் இயக்குனர் பாபி கொல்லி டைரக்ஷனில் தனது 158வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகும் இந்த படத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவரும் சிரஞ்சீவியின் மகளாக நடிக்க இருக்கிறாராம். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன்லால் முதன்முறையாக இணைந்து நடித்து அந்த கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது போல சிரஞ்சீவியுடன் முதல் முறையாக மோகன்லால் இணைந்து நடிக்கிறார் என்கிற செய்தி வெளியானதில் இருந்து படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.