உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு

60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடிகர் அவதாரத்தை தொடர்ந்து இயக்குனராக புதிய படத்தை இயக்கி வருகிறார். இது முழுக்க பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகும் ஒரு ஜாலியான படம். கென் இயக்கி, நடிக்கும் இந்த படத்தை ஏற்கனவே அறிவித்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

இதில் கென் கருணாஸ் உடன் இணைந்து சுராஜ் வெஞ்ராமுடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பார்வத்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 60 நாட்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஸ்கூலில் நடத்தினர். தினமும் சுமார் 250 மாணவ, மாணவிகள் நடிப்பது போன்ற காட்சிகளைக் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !