உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்'

கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்'

ஸ்ரீ மதுராஜா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ரீமதுராஜா தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'புகார்'. 'ரூட்' படத்தை இயக்கிய ஏ.சி. மணிகண்டன் இயக்குகிறார். நாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக ராஜ்கிரண் மற்றும் இன்னொரு நாயகியாக ஜனுஷ்கா நடிக்கின்றனர். மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படம் குறித்து இயக்குனர் மணிகண்டன் கூறும்போது கிரைம் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகிறது. இன்றைய சூழலில் காதலால் பல கௌரவ கொலைகள் அரங்கேறுகின்றன. அந்த குடும்பங்கள் சந்திக்கும் வலி, அதன்பிறகு அந்த குடும்பங்களின் நிலைமை என்ன ஆகிறது என்பது பற்றியும் காதலால் ஏற்படும் கொலைகளை தடுப்பதற்கு வழி சொல்லும் விதமாகவும் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !