உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில்

கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில்


சமீபத்தில் கேரளாவில் பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் சீனிவாசன் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் நடிகர்களான சூர்யா மற்றும் பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த சமயத்தில் அங்கிருந்த இயக்குனர் பாசில் நடிகர் பார்த்திபனை தனது வீட்டிற்கு வந்து செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பிறகு பாசிலின் வீட்டிற்கு பார்த்திபன் சென்றபோது அங்கே அவரது மகன் பஹத் பாசிலும் கூடவே இருந்தார்.

அப்போது பார்த்திபனிடம் பஹத் பாசிலை காட்டி, ''என் பையன் தான் பஹத்.. உங்களுக்கு தெரியும் தானே ?'' என்றார் அப்பாவியாக. அதற்கு பார்த்திபன், நடிகர் வடிவேலு பாணியில், ''சிட்டி, செங்கல்பட்டு, சவுத் ஆற்காடு, நார்த் ஆற்காடு, எப்எம்எஸ் மற்றும் அகில உலகம் வரைக்கும் அவரது நடிப்பானது அடைப்பிரதமன் (பாயாசம்) போல அவ்வளவு பேமஸ். அவரைப் பற்றி இப்படி கேட்கிறீர்களே'' என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு பஹத் பாசிலுடன், பார்த்திபன் உரையாடியபோது பார்த்திபனை நிறைய நேரம் பேச விட்டு அவர் அழகு பார்த்தாராம். அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க பார்த்திபன் விரும்பியதும், பஹத் பாசில் தானே அவரது மொபைல் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்துள்ளார். மீண்டும் அர்த்தத்துடன் சந்திப்போம் என ஒரு சின்ன சஸ்பென்சுடன் இந்த சந்திப்பு குறித்து பார்த்திபன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !