ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ‛மைசா'. ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் ரத்த வெள்ளத்தில் எதிரிகளை சுட்டு வீழ்த்த தயாராகிறார் ராஷ்மிகா. பின்னணியில், ‛சாவே செத்து போச்சு என் மகளை கொல்ல' என ஈஸ்வரியின் கம்பீர குரல் ஒலிக்கிறது.
இந்த படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா, தனது திரை வாழ்க்கையிலேயே மிகவும் துணிச்சலான மற்றும் வன்முறை நிறைந்த ஆக் ஷன் நடிப்பை வழங்கியுள்ளார். இயல்பான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில், அவர் தலைப்புக்கான கதாபாத்திரத்தை வியக்க வைக்கும் தீவிரத்துடன் சித்தரிக்கிறார். டீசரின் இறுதித் தருணங்களில் அவர் எழுப்பும் கர்ஜனை, 'மைசா'வின் கட்டுக்கடங்காத கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்துகிறது. 'மைசா' எனும் பெண் கதாநாயகியை வலிமைமிக்க கோண்ட் பழங்குடிப் பெண்ணாக சித்தரிக்கிறது.
தெலுங்கானா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பான்-இந்தியா அளவில் படத்தை வெளியிட உள்ளனர்.