உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட்

பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட்

தெலுங்குத் திரையுலகத்தில் கதாநாயகிகள் அணியும் ஆடைகள் பற்றி நடிகர் சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில சினிமா பிரபலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார் சிவாஜி. இருந்தாலும் தொடர்ந்து அது பற்றிய விவாதம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

கடந்த வாரம் ஐதரபாத்தில் நடைபெற்ற 'தி ராஜா சாப்' இரண்டாவது சிங்கிள் வெளியீட்டில் அப்படத்தின் கதாநாயகி நிதி அகவர்வால் ரசிகர்களால் கூட்டத்தில் நசுக்கப்பட்டார். அவரிடம் சில ரசிகர்கள் அத்துமீறிய வீடியோ காட்சிகளும் வெளிவந்தன. அதை மனதில் வைத்துத்தான் சிவாஜி பேசியிருக்க வாய்ப்புள்ளது.

சிவாஜியின் பேச்சுக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக நடிகை நிதி அகர்வால், “பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவது ஒரு வகை சூழ்ச்சி” என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

சிவாஜியின் கருத்துக்கு எதிர்ப்பு இருக்கும் வேளையில் சிலர் அவரது கருத்துக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளது தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !