சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள்
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் தம்பிகளில் ஒருவராக நடித்த சரவண விக்ரம், 'டியர் ரதி' என்ற படத்தில் ஹீரோ ஆகி உள்ளார். பிரவீன் கே மணி இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 2ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் நடந்தது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தவர்கள், சின்னத்திரை பிரபலங்கள், பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டு சரவண விக்ரமை வாழ்த்தியுள்ளனர்.
பல திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இந்த படத்தின் கதையும் கொஞ்சம் வித்தியாசமானது என்று கூறப்படுகிறது. ஐடி ஊழியரான ஹீரோ, ரதி என்ற பெண்ணை சந்திக்கிறார். அவருடன் ஒரு நாள் முழுக்க நேரம் செலவழிக்கிறார். அப்போது ஏற்படும் பிரச்னைகளே படக்கருவாம். ரதி கேரக்டரில் ஹஸ்லி நடித்துள்ளார். டார்க் காமெடி மற்றும் கொஞ்சம் அடல்ட் கன்டன்ட் கலந்து படம் உருவாகி உள்ளது. முதல் படம் என்றாலும் ஹீரோ சரவண விக்ரமுக்கு சில ஹாட் முத்தக்காட்சிகள் இருக்கிறதாம். கதைக்கு தேவை என்பதால் அதில் நடித்தேன் என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.