உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா?

உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா?


தெலுங்கில் அனில்ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் நடித்த 'பகவந்த்கேசரி' படத்தின் ரீமேக்தான், எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் என்று கூறப்படுகிறது. மலேசியாவில் நடந்த ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழாவில் இது குறித்து பேசிய இயக்குனர் எச்.வினோத் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

2023ம் ஆண்டு வெளிவந்த படம் 'பகவந்த்கேசரி'. பெண் குழந்தைகளை சிங்கக்குட்டிகள் மாதிரி வளர்க்க வேண்டும் என்பது படத்தின் கரு. ராணுவத்தில் சேர நினைக்கும் ஸ்ரீலீலாவுக்கு, ஹீரோ பாலகிருஷ்ணா எப்படி உதவி செய்கிறார். வில்லன் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பது கதை.

ஜனநாயகன் படத்தின் கருவும் அதுதான். இங்கே ஸ்ரீலீலாவுக்கு பதில் மமிதாபைஜூ நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் வருகிறார். காஜல் கேரக்டரில் பூஜா ஹெக்டே வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்சில் பெண் குழந்தைகள் திறமையை சொல்லும் காட்சிகள் இருக்கின்றன. அதனால்தான் ஜனநாயகன் விழாவில் மமிதாவை புகழ்ந்து பேசினார் விஜய், அவர் அனைத்து குடும்பத்திலும் புகழப்படுவார் என்றார்.

தமிழுக்கு தக்கப்படி கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். விஜயின் கடைசி படம் ஒரு தெலுங்கு ரீமேக்படம். பெண்களை கவரும் காட்சிகள் இருப்பதால், பெண்கள் விரும்பும் கதை என்பதால், தனது அரசியல் பயணத்தை மனதில் வைத்து இந்த கதையில் விஜய் நடித்துள்ளார். இந்த படம் பார்த்தால் அவருக்கு பெண்கள் ஓட்டு அதிகரிக்கும் என்பது விஜய் தரப்பு திட்டம் என்று ஒரு தரப்பு சொல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !