உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்?

விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்?


சுந்தர்.சி இயக்கத்தில் 'மதகஜராஜா, ஆம்பள' என 2 படங்களில் விஷால் நடித்துள்ளார். இதில் 'மதகஜராஜா' 12 ஆண்டுகளுக்குபின் வந்தாலும் பெரிய வெற்றி பெற்றது. 'ஆம்பள' ஓகே ரகம். இப்போது இந்த கூட்டணி 3வது முறையாக இணைகிறது. இந்த படத்துக்கு சுந்தர்.சியின் ராசியான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க, அவரின் சொந்த கம்பெனியான அவ்னி தயாரிக்கிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, படத்தலைப்பு வெளியாக உள்ளது.

இப்போது 'மூக்குத்தி அம்மன் 2'வை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. தான் இயக்கி, நடிக்கும் 'மகுடம்' படத்தில் பிஸியாக இருக்கிறார் விஷால். இருவரும் இந்த படங்களை முடித்துவிட்டு வருகிறார்கள். ஆம்பள படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயின், மதகஜராஜாவில் அஞ்சலி, வரலட்சுமி நடித்து இருந்தனர்.

இந்த படத்தில் ஹீரோயின் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கயாடு லோஹர் இருக்க வாய்ப்பு என தகவல். கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்து சில காரணங்களால் விலகிய சுந்தர்.சி, விஷால் படத்தை இயக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்ததக்கது. இந்த படத்தில் குஷ்பு கவுரவ வேடத்தில் நடிக்க வாய்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !