சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா
ADDED : 4 minutes ago
நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் முன்னனி நடிகர்களுடன் இணைந்து பிஸியாக நடித்து வருகிறார். அனிமல், புஷ்பா 2 உள்ளிட்ட பான் இந்திய படங்களில் நடித்து மிக பிரபலமாகியுள்ளார். குறிப்பாக பாலிவுட் பட வாய்ப்புகள் ராஷ்மிகாவை தேடி வருகின்றனர் என்கிறார்கள். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ராஷ்மிகாவை தேடி வரும் புதிய படங்களுக்கு ரூ. 10 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து தயாரிப்பாளர்களும் சம்பளம் தர தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.