'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு
ADDED : 7 hours ago
உப்பன்னா பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
அடுத்தாண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து ஜான்வி கபூர், சிவராஜ் குமார் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து இப்போது ஜெகபதி பாபுவின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அவர் அப்பல்லா சூரி எனும் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.