உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்!

அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்!


நடிகர் அஜித்குமார் நடித்த 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என இரண்டு படங்கள் இந்தாண்டு வெளியாகி அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. இதனைத்தொடர்ந்து கார் ரேஸில் பிசியாக பங்கேற்று வருகிறார். அவரது 'அஜித்குமார் ரேஸிங்' அணி பல நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து சாதித்தது.

இதற்கிடையே தனது கார் ரேஸ் அனுபவங்களை ஆவணப்படமாக உருவாக்க நடிகர் அஜித்குமார் திட்டமிட்டார். இதற்காக இயக்குனர் ஏ.எல். விஜயை அழைத்த அஜித், ஆவணப்படம் உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். மலேசியா சென்ற இயக்குனர் விஜய், அங்கு அஜித்தை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை முழுவதுமாக முடித்த பிறகே ஆவணப்படமாக வெளியிடுவதா அல்லது திரைப்படமாக வெளியிடுவதா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என இயக்குனர் ஏ.எல்.விஜய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, இதன் டிரைலர் போன்ற வீடியோவை வெளியிட்டு அதில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அந்த வீடியோவை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், 'மீண்டும் ஒருமுறை அஜித் உடன் கைகோர்க்கிறேன். மாஸான கிளாஸான பாடல், மியூசிக் விரைவில். இயக்குனர் விஜய் மற்றும் சுரேஷ் சந்திராவுக்கு நன்றி' எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த படத்திற்கு இசையமைக்கும் பணியை துவங்கி விட்டதை உணர்த்தும் விதமாக 'வொர்க் மோட்' என ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இந்த ஆவணப் படத்தை 2026ம் ஆண்டில் மே 1ம் தேதியன்று அஜித் குமாரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் நடித்து வரும் ஆவணப்படம் வெளிவருவது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !