ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா
மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக சர்வம் மாயா திரைப்படம் வெளியானது. விபத்தில் இறந்து போன ஒரு இளம்பெண்ணின் ஆவி இளைஞர் அணி நிவின்பாலியை தேடி வந்து அவரூடன் நட்பாக பழகி காதலில் விழுகிறது. இதை மையக் கருவாகக் கொண்டு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த சில வருடங்களாகவே நிவின்பாலியின் படங்கள் தொடர்ந்து தோல்வியே சந்தித்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த சர்வ மாயா திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல ஐந்தே நாட்களில் 50 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. இது குறித்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் நிவின்பாலி, “என் மனம் தற்போது நிரம்பி வழிகிறது. இதை உங்கள் படமாக வெற்றியடை செய்ததற்கு நன்றி” என்று கூறியுள்ளார். இயக்குனர் அகில் சத்யன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக பிரீத்தி முகுந்தன் மற்றும் ரியா ஷிபு காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.