வாசகர்கள் கருத்துகள் (1)
இவர் படத்தில் நடிக்க நடிகர்கள் கிடைக்கவில்லை
தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு இடையில் சிறு சறுக்கல். கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து ‛மதராஸி' படத்தை இயக்கினார். இந்த படமும் சுமார் ரகம் என்ற அளவிலேயே இருந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் என தகவல் பரவியது.
இந்நிலையில் முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, என் அடுத்த படத்தை நான் நீண்ட வருடங்களாக உருவாக்க ஆசைப்பட்ட கிராபிக்ஸ் குரங்கு படத்தை இயக்க போகிறேன். இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். இதுதான் என் முதல் படமாக உருவாக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த கதையை நான் உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டத்தில் எழுதினேன் என தெரிவித்துள்ளார்.
இவர் படத்தில் நடிக்க நடிகர்கள் கிடைக்கவில்லை