ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
ADDED : 10 hours ago
நடிகர் ரியோ ராஜ் நடித்து சமீபத்தில் வெளியான 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ் புதிதாக 'ராம் இன் லீலா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இந்த படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கின்றார்.
இந்த படத்தில் கதாநாயகியாக வர்த்திகா என்பவர் தமிழில் அறிமுகமாகிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது என்பதை ஒரு சிறப்பு போஸ்டரை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அறிவித்துள்ளனர்.