கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை!
ADDED : 50 days ago
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா ரங்கநாதன். அதற்கு முன்பு ரம்யா ரங்கநாதன் சமூக வலைதளங்களில் அவரது நடனத்தின் மூலம் பிரபலமாக இருந்தார்.
தற்போது 'ஜமா' படத்தின் மூலம் பிரபலமான பாரி இளவழகன் இயக்கி, நடித்து வரும் புதிய படத்தில் கதையின் நாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இதில் நடிகை ரோஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.