தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது?
ADDED : 2 days ago
'தேரே இஸ்க் மெய்ன்' படத்தை அடுத்து 'போர் தொழில்' படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் நடித்து வந்தார் தனுஷ். அப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் 1980 காலகட்ட கதைகள் உருவாகி உள்ளது. இறுதி கட்டப் பணிகளை மூன்றே மாதங்களில் முடித்துவிட்டு கோடை விடுமுறையில் படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இப்படத்துக்கு 'அறுவடை' என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.