உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன்

இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான ரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் 'அரிசி'. எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இதில் அறிவு மற்றும் வேடன் ஆகியோர் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.

அது குறித்து இயக்குனர் கூறுகையில், ''இப்படத்தின் பணிகள் நிறைவடைந்திருக்கும் தருணத்தில், விவசாயத்தை பற்றிய பாடல் ஒன்றை இளையராஜா உருவாக்கி இருக்கிறார். அந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, பிரபல பாடகரான வேடன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டக்கரமான வாழ்வை விவரிக்கும் வகையில் அந்த பாடல் கரு உருவாகி உள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி மாத இறுதியில் நடைபெறும். பிப்ரவரி மாதம் படம் ரிலீஸ்'' என்கிறார். கேரளாவில் முன்னணி பாடகராக இருக்கிறார் வேடன். அவரின் கச்சேரிகளுக்கு அங்கே தனி மவுசு. தமிழகத்தில் அறிவு பாடல்களுக்கு தனி வரவேற்பு உள்ளது. இவர்கள் இளையராஜாவுடன் இணைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !