வாசகர்கள் கருத்துகள் (3)
அப்படி விசேஷமாக ஒன்றும் இல்லை - வழக்கமான சீமான் விடும் பொய்கள்தான் இருக்கிறது
சல்லி ஆட்கள் தயாரித்த படம் இப்படி தான் போகும்
பார்க்க வேண்டும் .அவர்கள் முகத்தில் கரி பூச வேண்டும்
2026ம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று “ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, தி பெட், டியர் ரதி, அனலி, மாமகுடம்” ஆகிய 6 படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. 'சல்லியர்கள்' படம் தியேட்டர்களை எதிர்த்து ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இலங்கைத் தமிழர் போராட்டத்தை மையப்படுத்தி அங்கு நடக்கும் மருத்துவ உதவி குழு பற்றிய கதையாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. சென்சார் பிரச்சனை காரணமாக இப்படத்தில் சிங்களம் என்று குறிப்பிடாமல் சிங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்படத்திற்காக தமிழகத்தில் மொத்தம் 27 தியேட்டர்கள் மட்டும்தான் கிடைத்ததாம். அதுவும் மாலை காட்சி, இரவுக் காட்சிகள் கிடைக்காமல் காலைக் காட்சிதான் கொடுக்கப்பட்டதாம். நடிகர் கருணாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வினியோக உரிமை பெற்று வெளியிடுகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியை நடத்தி அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இப்படத்திற்குக் குறைந்த அளவே தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆளும் அரசு, திரைப்பட சங்கங்கள் உள்ளிட்ட யாரும் கார்ப்பரேட் தியேட்டர் நிர்வாகத்தின் ஏகபோக உரிமையை எதிர்ப்பதில்லை என்றும் குறை கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளேன் என்று அறிவித்தார்.
தற்போது OTT plus என்ற ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது. அதில் கட்டணம் செலுத்தி படத்தைப் பார்க்க வேண்டும்.
அப்படி விசேஷமாக ஒன்றும் இல்லை - வழக்கமான சீமான் விடும் பொய்கள்தான் இருக்கிறது
சல்லி ஆட்கள் தயாரித்த படம் இப்படி தான் போகும்
பார்க்க வேண்டும் .அவர்கள் முகத்தில் கரி பூச வேண்டும்