75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா
ADDED : 5 minutes ago
பிரேமம் புகழ் நிவின்பாலி நடிப்பில் கிறிஸ்துமஸ்க்கு வெளியான மலையாள படம் சர்வம் மாயா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இந்த படம் திகில் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகி இருக்கிறது. இப்படம் திரைக்கு வந்து கடந்த எட்டு நாட்களில் இதுவரை 76 கோடியை கடந்து வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, தற்போது இப்படத்துக்கு போட்டியாக பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் இன்னும் பெரிய அளவில் வசூலிக்கும் என்றும் கூறப்படுகிறது. அகில் சத்யன் இயக்கியுள்ள இந்த படத்தில் நிவின் பாலியுடன் ரியா சிபு, அஜு வர்கீஸ், ஜனார்த்தனன், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளர்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார் .