வாசகர்கள் கருத்துகள் (1)
don't do dirty politics...
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இப்படம் ஆரம்பமானதில் இருந்தே பாலகிருஷ்ணா நடித்து 2023ல் வெளிவந்த தெலுங்குப் படமான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்ற ஒரு பேச்சு இருந்து வந்தது. ஆனால், அது குறித்து படக்குழு எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில் நேற்று டிரைலர் வெளியான பின் இது 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் என்பது உறுதியானது. விஜய்க்கு ஏற்றபடி சில காட்சிகளை மாற்றியமைத்து, சில அரசியல் காட்சிகளை கூடுதலாகச் சேர்த்துள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். 'பகவந்த் கேசரி' படத்தை விடவும் கூடுதல் பிரம்மாண்டத்துடன் செலவு செய்து எடுததுள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள்.
'பகவந்த் கேசரி' படம் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏற்கெனவே எண்ணற்ற ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு படம். பாலகிருஷ்ணாவின் ஆக்ஷன் படம் என்றாலே அதைப் பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.
அப்படி பலராலும் பார்க்கப்பட்ட ஒரு படத்தை தற்போது விஜய் நடிக்க 'ஜனநாயகன்' படமாக மீண்டும் பார்க்க தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆவல் இருக்கலாம். ஆனால், மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகப் போகும் இப்படத்தை மற்ற மொழி ரசிகர்கள் வந்து பார்ப்பார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மற்ற மொழிகளில் நேரடிப் படங்கள் வருவதால் அதைப் பார்க்கவே விரும்புவார்கள். அதையும் மீறி 'ஜனநாயகன்' படத்தை அவர்கள் பார்ப்பது படம் வந்த பிறகு வரும் விமர்சனங்களைப் பொறுத்தே அமையும்.
don't do dirty politics...