உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' டிரைலரில் இவ்வளவு விஷயங்களா? டிகோடிங் செய்யும் நெட்டிசன்கள்

'ஜனநாயகன்' டிரைலரில் இவ்வளவு விஷயங்களா? டிகோடிங் செய்யும் நெட்டிசன்கள்


விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' படத்தின் டிரைலர் நேற்று மாலை சரியாக 6:45 மணிக்கு வெளியானது. டிரைலரை டிரண்டிங் ஆக்க வேண்டும், அதிக வியூஸ் வர வேண்டும் என விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் களம் இறங்கி வேலை செய்கிறார்கள்.

டிரைலர் எப்படி என்று விசாரித்தால் படத்தின் துவக்கத்திலேயே பல்வேறு விதமான ஆயுதங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். முதல் வசனமே ஒரு பெயரை அனுப்பி இருக்கிறேன் அவன் யார் என்று விசாரித்து சொல்லவும் என ஒருவர் சொல்ல, இன்ஸ்பெக்டர் பல்லாவரம், 'தளபதி வெற்றிக் கொண்டான்' என்கின்ற பெயரானது வாட்ஸ் அப் மூலம் தெரிய வருகிறது. அது அவரது கட்சியான 'தமிழக வெற்றிக் கழகம்' என்பதன் சுருக்கமான 'டி.வி.கே' என்பதையும் மறைமுகமாக குறிக்கிறது.

விஜய் போலீஸ் உடை அணிந்து வருவதால் அவர் கடைசி படத்தில் போலீஸ் கேரக்டர் ஏற்று நடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

முதல் வசனம் மூலமாக கேள்வி எழுப்பியவருக்கு பதில் கூறும் விதமாக சம்பவம் செய்யக்கூடிய நபரை கேள்விப்பட்டிருப்பீர்கள், சம்பவம் செய்வதில் ரெக்கார்ட் வைத்திருப்பவர்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா என பதில் கூறும் விதமாக விஜய் மாஸ் ஆன ஆக்ஷன் காட்சிகள் அவரது முகம் காட்டாதவாறு கையில் கோடாரி, துப்பாக்கி போன்றவை வைத்து எதிரிகளை வீழ்த்துவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

டிரைலரின் விஜயின் முகம் காட்டக்கூடிய காட்சிகளில் இரண்டு யானைக்கு நடுவே தீப்பந்தத்துடன் இருள் சூழ்ந்த நிலையில் விஜயினை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இவை அனைத்துமே அவரது கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் குறியீடுகளாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக டிரைலரில் ஒரு காட்சியில் எத்தனை பேரை அடித்து விழித்திருக்கிறாய் அப்பொழுது நீ சூப்பர்மேன்னா என ஒரு குழந்தை விஜய் இடம் கேட்க ? அதற்கு விஜயோ நான் சாதாரண ஆள் தான் இருப்பினும் செய்யக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் சூப்பராக இருக்கும் என கூறும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

'பெண்களுக்கு பயம் இருக்கக் கூடாது, அதிலும் அவர்களை புலியைப் போல வளர்க்க வேண்டும்' என்கிற வசனத்தை விஜய் பேசி தன்னுடைய மகளான மம்தாவை ராணுவத்தில் சேர்ப்பதற்கான கடினமான பயிற்சிகளை வழங்குவது போல காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆங்காங்கே நகைச்சுவை இருப்பது போலவும், அவை அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது.

படத்தில் விஜயின் செல்ல மகளாக வளர்ந்து இருக்கக்கூடிய மமிதா பைஜுவை வில்லன் ஒருவர் தாக்குகிறார். என் மகளை தாக்கியது யார் என கையில் ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக விஜய் வசனம் பேசி இருக்கிறார்.

அடுத்ததாக படத்தின் வில்லன் பாபி தியோலை காண்பிக்கிறார்கள் மிகவும் கொடூரத்தனம் கொண்ட நபராக அவரின் அறிமுக காட்சி இருக்கிறது. ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் இந்தியாவே தன்னுடைய காலடியில் விழும் என அவர் பேசுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக படத்தின் மற்ற கதாபாத்திரங்களான பிரகாஷ்ராஜ், சுனில், நரேன், பிரியாமணி, ஆகியோரது கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக காண்பிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தன்னுடைய மகளின் பயத்திற்கு பின்னால் ஏதோ ஒரு சம்பவம் ஒளிந்திருப்பதாகவும் அதனை கண்டறிந்தால் நாட்டையே காப்பாற்றலாம் என விஜய் பேசுவது போலவும் இந்திய ராணுவம் தொடர்பாக ஏதேனும் கற்பனைகளை புகுத்தி அதற்கு தீர்வு சொல்வது போல இருக்கலாம் என்கிற வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

டிரைலரில் வில்லன் கதாபாத்திரம் 'இந்த நேரத்தில் கதாநாயகனை கொன்றால் மக்கள் அவனை கடவுள் ஆக்கி விடுவார்கள்' என்று கூறுவது போலவும் அதற்கு அடுத்ததாக 'கத்தி' திரைப்படத்தில் விஜயின் மாஸான டயலாக் ஆன 'ஐ அம் வெயிட்டிங்' என்கிற டயலாக்கை விஜய் சொல்வது போல சற்று மாற்றி அதனை 'ஐ யம் கம்மிங்' (I am coming) என அரசியலில் தான் நுழைவதை மீண்டும் ஒருமுறை சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.

இறுதியாக அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் கொலை செய்வதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் எதற்காக அரசியலுக்கு வருகிறீர்கள் என கையில் சாட்டையை சுழற்றியவாறு விஜய் பேசி இருப்பது போல டிரைலர் முடிகிறது. இப்படியாக டிரைலரில் அரசியலும் இருக்கிறது. டிரைலரை பார்க்கும்போது இது பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' ரீமேக் என்பதும் தெரிகிறது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

SIVA, chennai
2026-01-10 10:01:40

அவன் அவனவன் எட்டு வயதிலே சாப்ட்வேர் கோடிங் எழுதி சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான் , இதுங்க இன்னமும் டி கோடிங் பண்ணி கொண்டு இருக்குதுங்க பரலோகத்தில் இருக்கும் எங்கள் பராமபிதாவே இந்த தற்குறிகளை காப்பாற்றுங்கள் ......


sankar, Nellai
2026-01-07 16:56:19

ஏதாவது செய்து இந்த ஆளும் மாடல் அயோக்கியர்கள் ஒழிந்தால் சரி


kamal
2026-01-05 06:17:33

don't do dirty politics