பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன்
ADDED : 7 days ago
மலையாள சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் பிரேம் நசீர். 600 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்து சாதனை படைத்தவர். நடிகை ஷீலாவுக்கு ஜோடியாக மட்டும் 60 படங்களுக்கு மேல் நடித்தார். 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
பிற்காலத்தில் அதாவது 1980களில் அவரது மகன் ஷாநவாஸ் நடிக்க வந்தார். 100 படங்கள் வரை நடித்த அவர் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்தார். அந்த படம் 'ஜாதிப்பூக்கள்'. ஏ.பி.ரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் ஷாநவாஸ் ஜோடியாக நளினி நடித்தார். இவர்களுடன் கே.கே.சவுந்தர், கவுண்டமணி, என்னத்த கண்ணையா, ஒய்.விஜயா, டி.கே.எஸ்.நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் தோல்வி அடைந்ததால் ஷாநவாஸ் தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை.