எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு
மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் 99/66 (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு). இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர்.
பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பேசியதாவது: ஷீட்டிங்கின் போது இந்தப் படத்தை சின்ன படம் என நினைத்தேன் இங்கு விழா பிரம்மாண்டமாக நடப்பதைப் பார்த்தால் மிகப்பெரிய படமாக தெரிகிறது. புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விஷயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும்.
எனது சினிமா பயணத்தில் சம்பள பாக்கி போன்ற பல பிரச்னைகள் நடந்திருக்கும். சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி விடுவார்கள். எனக்கும் அது நடந்திருக்கிறது. ஆனால் இந்த படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பிலேயே எனது முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்கள். எனக்கு யாருமே இதை செய்யவில்லை. அன்பாக பார்த்துக் கொண்டார்கள்.
இதில் நான் பேயாக நடித்திருக்கிறேன். ஆனால் நான் நார்மலான பொண்ணுதான். அவ்வப்போது மட்டும் பேய் பிடிக்கும். கோவம் வருவது போலத்தான் அந்த பேயும் வரும். அது நடிப்பு போல தெரியாது. ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.