உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்'

பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்'

2026 பொங்கல், சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு தமிழ், தெலுங்கில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. இரண்டு மொழிகளிலும் தயாராகும் படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது வழக்கமானது. அந்த விதத்தில் இந்த போட்டியில், தமிழில் விஜய்யின் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', தெலுங்கில் பிரபாஸின் 'தி ராஜா சாப்', சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வரபிரசாத் காரு' ஆகிய படங்களின் டிரைலர்கள் வெளியாகி உள்ளன.

இந்த நான்கு முக்கிய நடிகர்களின் படங்களின் டிரைலர்களில் விஜய்யின் 'ஜனநாயகன்' டிரைலர் அதன் ஒரிஜனல் உருவாக்க மொழியான தமிழில் 36.8 மில்லியன் பார்வைகளுடன் உள்ளது. இந்த டிரைலர் வெளியாகி இரண்டு நாட்கள்தான் ஆகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து, தமிழில் உருவாகியுள்ள 'பராசக்தி' டிரைலர் நேற்று மாலை வெளியானது. 24 மணி நேரம் முடிய இன்னும் ஒரு பகல் உள்ள நிலையில் இந்த டிரைலர் தற்போது 26 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

பிரபாஸின் 'தி ராஜா சாப்' டிரைலர் அதன் ஒரிஜனல் உருவாக்க மொழியான தெலுங்கில் 25.9 மில்லியன் பார்வைகளுடன் உள்ளது. இந்த டிரைலர் வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது.

சிரஞ்சீவி நடித்து தெலுங்கில் உருவாகி, நேற்று மாலை வெளியாகியுள்ள 'மன ஷங்கர வரபிரசாத் காரு' டிரைலர் தற்போது 21 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

24 மணி நேர டிரைலர் பார்வைகளில் சிரஞ்சீவி, பிரபாஸ் படங்களை விட விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் முன்னிலை வகிக்கின்றன.

அதேசமயம் சில நாட்களுக்கு முன்பு பிரபாஸின் 'தி ராஜா சாப்' டிரைலர் ஹிந்தியில் 33 மில்லியன் பார்வைகளைக் கடந்து மற்ற நடிகர்களின் படங்களை விடவும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பிரபாஸ் மீண்டும் அவரது பான் இந்தியா பிரபலத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !