வாசகர்கள் கருத்துகள் (1)
அவர் தெலுங்குல காமெடி பீஸ் இவன் தமிழுல
ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகும் போதுதான் அந்தப் படங்கள் டிரெண்டிங்கில் இருக்கும். ஆனால், வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு டிரெண்டிங்கில் அதுவும் முதலிடத்தில் வந்துள்ளது 'பகவந்த் கேசரி' படம்.
அனில் ரவிப்புடி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிப்பில் 2023ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'பகவந்த் கேசரி', 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் ரீமேக் படமாகத்தான் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் உருவாகியுள்ளது.
ரீமேக் படம்தானா என்பது குறித்து படக்குழுவினர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இருந்தாலும் படத்தின் டிரைலர் வெளியான பின்பு, அது உண்மைதான் என்பது உறுதியானது. பாலகிருஷ்ணா நடித்துள்ள பல படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி தியேட்டர்களிலும், பின்னர் ஓடிடி தளங்களிலும் வெளியாகி உள்ளது. அவரது படத்தைப் பார்ப்பதற்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் உண்டு.
தற்போது விஜய்யின் 'ஜனநாயகன்', படம் 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் என்பதால் அதைப் பார்க்கும் ஆர்வம் மற்ற ரசிகர்களுக்கும் வந்துவிட்டது. அதனால், ஓடிடி தளத்தில் உள்ள 'பகவந்த் கேசரி' படம் தற்போது டிரெண்டிங்கில் முதலிடத்தில் வந்துள்ளது.
பாலகிருஷ்ணாவின் அதிரடியையும் மிஞ்சும் அளவிற்கு விஜய்யின் அதிரடி இருக்குமா என்பது படம் வந்த பிறகுதான் தெரியும்.
அவர் தெலுங்குல காமெடி பீஸ் இவன் தமிழுல