உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி'

'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி'

தமிழ் சினிமா உலகில் யு டியூபில் வெளியாகும் டீசர்கள், டிரைலர்கள், பாடல்கள் ஆகியவற்றில் விஜய், அஜித் படங்கள்தான் மாறிமாறி சாதனை படைக்கும். அப்படியான சாதனைகளில் எப்போதும் விஜய்தான் புதுப் புது சாதனைகளைப் படைப்பார். அப்படியான சாதனையாக நேற்று முன்தினம் வெளியான 'ஜனநாயகன்' டிரைலர் 24 மணி நேரத்தில் 34.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது.

அந்த சாதனை ஒரே ஒரு நாள் மட்டுமே நீடித்துள்ளது. அதை நேற்று வெளியான 'பராசக்தி' டிரைலர் தற்போது முறியடித்துள்ளது. சற்று முன்னர் முடிந்த 24 மணி நேரத்தில் அந்த டிரைலர் 40 மில்லியன் பார்வைகளை 'ரியல் டைம்'மில் பெற்றுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் என்றாலும், மற்றொரு கதாநாயகனாக அதர்வா, வில்லனாக ரவிமோகன் ஆகியோரும், கதாநாயகியாக ஸ்ரீலீலாவும் நடித்துள்ளார்கள்.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளிவரும் 100வது படம் இது. 1964ம் ஆண்டு நடக்கும் பீரியட் படம் என்பதாலும், ஹிந்தித் திணிப்பை மையப்படுத்திய அண்ணன், தம்பி கதை என சில முக்கியத்துவங்கள் இந்தப் படத்திற்கு இருப்பதால், டிரைலருக்கு வரவேற்பு கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

angbu ganesh, chennai
2026-01-06 09:39:24

ஆமாமா உங்கள் விஜய் பண்ற தில்லு முள்ளு வசூல் எல்லாருக்குமே தெரியும் கருப்பு பணத்தை அதும் மெஷினரி பணத்தை வெள்ளையாக்கிறான் பிராடு


முருகன்
2026-01-05 20:21:48

வசூலில் விஜய் அருகில் கூட ..... வர முடியாது அரசியல் விளையாட்டு இது


SULLAN, chennai
2026-01-06 11:29:59

பாவம்டா முருகா ... தயாரிப்பாளர் இப்பவே தலையை வெளியே காட்ட முடியாம துண்டைத்தான் போட்டு கொண்டு திரியிராராம் ?? கேசரி சரி இல்லையோ என்னவோ??


BHARATH, TRICHY
2026-01-06 08:56:09

வசூல் அப்படிங்கர பேர்ல வாயில் வடை சுடுபவன் ஜோசப்