வாசகர்கள் கருத்துகள் (1)
இதெல்லாம் ஒரிஜினல் இல்லை இது உதவாத நிதியும் அவனோட அல்ல கைகளும் & அணில் பிள்ளைகளும் அவனுடைய அல்ல கையான கோல்ட் காயின் பண்ற தில்லு முள்ளு வேலைங்க ஒரிஜினல்னு பார்த்தா இதெல்லாம் பாதிக்கு பாதியாதான் இருக்கும்
பொங்கலுக்கு படங்கள் வெளிவந்த பின் எது நன்றாக இருக்கப் போகிறது, எது வசூலை குவிக்கப் போகிறது என்பதுதான் 'ஜனநாயகன், பராசக்தி' ஆகிய இரண்டு படங்களின் டிரைலர்கள் வெளியாவதற்கு முன்பு வரை இருந்தது. ஆனால், இரண்டு படங்களின் டிரைலர்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்து தற்போது டிரைலர்களுக்குள்ளேயே போட்டியையும், சர்ச்சையையும், கமெண்ட்டுகளையும் வரவழைத்துவிட்டது.
'ஜனநாயகன்' டிரைலர் 24 மணி நேரத்தில் 34.8 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. அந்த சாதனையை 'பராசக்தி' டிரைலர் 6 மில்லியன் பார்வைகளைக் கூடுதலாகப் பெற்று 40 மில்லியன் பார்வைகளைக் கடந்து, அந்த சாதனையை ஒரே நாளில் முறியடித்தது.
இது விஜய் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பராசக்தி' படத்தின் பார்வைகளை 'பாட்ஸ்' வைத்து ஏற்றினார்கள் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு முன்பெல்லாம் விஜய் படங்களின் டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள் சாதனை புரிந்த போது அவை 'பாட்ஸ்' வைத்து ஏற்றப்பட்டதா என்ற பேச்சை அவர்கள் பேசியதே கிடையாது. தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' டிரைலரின் சாதனை முறியடிக்கப்படுவதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்பதுதான் உண்மை.
விஜய் படங்களுக்குக் கிடைக்கும் பார்வைகள் உண்மையானவை என்றும் மற்ற நடிகர்களின் படங்களுக்குக் கிடைக்கும் பார்வைகள் போலியானவை என்றும் விஜய் ரசிகர்கள் இந்த யு டியூப் பிரபலமான காலத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள்.
அதே சமயம், 'ஜனநாயகன்' படத்தின் முதல் சிங்கிளான 'தளபதி கச்சேரி' பாடல் 24 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றதையும், தற்போது அது 91 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதையும் பற்றிப் பேச அவர்கள் தயாராக இல்லை.
தற்போது 'ஜனநாயகன்' டிரைலர் 39 மில்லியன் பார்வைகளுடனும், 'பராசக்தி' டிரைலர் 41 மில்லியன்களுடனும் போய்க் கொண்டிருக்கிறது.
இதெல்லாம் ஒரிஜினல் இல்லை இது உதவாத நிதியும் அவனோட அல்ல கைகளும் & அணில் பிள்ளைகளும் அவனுடைய அல்ல கையான கோல்ட் காயின் பண்ற தில்லு முள்ளு வேலைங்க ஒரிஜினல்னு பார்த்தா இதெல்லாம் பாதிக்கு பாதியாதான் இருக்கும்