'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா?
சிரஞ்சீவி நடிப்பில் வரும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக அவர் நடித்துள்ள 'மன சங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. அனில் ரவிபுடி இயக்கியுள்ள இந்த படத்தில் வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சமீப நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதன் மெகா புரமோஷன் நிகழ்ச்சி நாளை (ஜனவரி 7) ஹைதராபாத்தில் உள்ள சிப்பக்கலா வேதிகாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
ஆனால் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொள்ளவில்லை. காரணம் கடந்த சில மாதங்களுக்கு மேலாகவே அவர் முழங்காலில் ஏற்பட்டுள்ள வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு தற்போது முழங்காலில் அவர் சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வருகிறாராம். மருத்துவர்கள் அவரை ஒரு மாதம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கூறியதால் தான் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் இந்த மெகா புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வாரா என்பது இப்போது வரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது.