உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன்

பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கல்கி 2898 ஏடி. புராண அறிவியல் புனைக்கதையில் உருவான இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. குறிப்பாக, இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். தற்போது கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் நாக் அஸ்வின். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தொடங்குகிறார். அப்போது கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதல்கட்டமாக படமாக்கப் போகிறாராம்.

தற்போது சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் நடித்து வரும் பிரபாசும் விரைவில் கமலுடன் இணையப் போகிறார். அப்போது அவர்கள் இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் அதிரடியான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. கல்கி முதல் பாகத்தில் நடித்த தீபிகா படுகோனே இப்படத்திலிருந்து விலகி விட்ட நிலையில், அவருக்கு பதிலாக நடிப்பது யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !