ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்'
ADDED : 4 days ago
நடிகர் ஜீவா தற்போது மலையாளத்தில் பலிமி படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் 'தலைவர் தம்பி தலைமையில்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மலையாள இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற ஜனவரி 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது என இன்று அறிவித்துள்ளனர். இப்படம் ஜீவாவிற்கு கம்பேக் படமாக அமையும் என திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ளதாம்.