உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை!

நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை!

நாளை (ஜன.,9) வெளியாக இருந்த ஜனநாயகன் படம், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை (ஜன.,9) ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால், பட வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில், விசாரணையின் முடிவில், நாளை(9ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

@subtitle@ஒத்திவைப்பு@@subtitle@@
இந்நிலையில், இந்தப் படத்தை தயாரித்த நிறுவனம், தவிர்க்க முடியாத காரணங்களினால் படத்தை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
@subtitle@கனத்த இதயத்துடன்..@@subtitle@@
இதுகுறித்து வெளியான அறிக்கை: கனத்த இதயத்துடன் இந்த அப்டேட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ள சூழல் காரணமாக, ஜனநாயகன் படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறோம். இந்த முடிவை எடுப்பது எளிதல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் பேராதரவே எங்கள் மிகப்பெரிய பலம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

angbu ganesh, chennai
2026-01-08 09:53:01

ஆடின ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன 300 500 1000 கோடி வடைகள் என்ன சுடாலின் உன்ன வச்சு செஞ்சிட்டார் என்னமோ உன் தற்குறிகள் ரஜினி அரசியலுக்கு வர பயந்தாருன்னு கூவிகிட்டுனு இருந்தானுங்களே இப்போ பாத்தியா


angbu ganesh, chennai
2026-01-08 09:51:14

ஆடின