உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


நடிகரும், சமையற்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னுடன் குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டா தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கிற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி மாதம்பட்டி ரங்கராஜின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !