உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு கிடைத்த ஆதரவு விஜயின் ஜனநாயகனுக்கு கிடைத்ததா?

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு கிடைத்த ஆதரவு விஜயின் ஜனநாயகனுக்கு கிடைத்ததா?

கமல்ஹாசன் தயாரித்து, நடித்து, இயக்கிய ‛விஸ்வரூபம்' படத்துக்கு சில தடைகள் வந்தன. படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு பிரச்சனைகள் சூழ்ந்தன. அப்பொழுது அதிமுக ஆட்சியில் இருந்தாலும் பல திரையுலக கலைஞர்கள் கமல்ஹாசனுக்கு நேரிலும், தொலைபேசியிலும் வேறு வகையிலும் ஆதரவு தெரிவித்தனர். இப்பொழுது விஜயின் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு பிரச்சனைகள்.

இந்த விஷயத்தில் கமல் அளவுக்கு விஜய்க்கு ஆதரவில்லை. சோசியல் மீடியாவில் கூட பெரிய நடிகர்கள் சினிமா சங்கங்கள் தங்களால் முடிந்த வாய்ஸ் கொடுக்கவில்லை. இதுபற்றி விசாரித்தால் கமல்ஹாசன் பெரும்பாலும் சினிமா சார்ந்த சமூகம் சார்ந்த பல பிரச்னைகளுக்கும் துணை நின்றார் பல விஷயங்களில் ஆதரவு கொடுத்தார். நல்ல படத்தை பாராட்டினார். ஆனால் விஜய்யை பொறுத்த வரையில் யாருடைய நல்லது கெட்டதில் கூட அதிகம் பங்கு பெற்றது இல்லை. தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்களின் திருமண வீடுகளுக்கு கூட செல்வதில்லை. சுருக்கமாகச் சொன்னால் எந்த சினிமாக்காரரையும் மதித்ததில்லை. ஆகவே இந்த பிரச்னையில் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்கிறார்கள்.

மேலும் இது சட்டம், கோர்ட் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தேவையில்லாமல் பேச முடியாது. ஏதாவது பேசினால் சிக்கலாகும். சட்ட ரீதியான பிரச்னையை அவரும், பட குழுவும் தான் சந்திக்க வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். அதேசமயம் ஜனநாயகம் பட விவகாரத்தில் தனக்கு தமிழ் திரையுலகம் ஆதரவில்லை என விஜய் தரப்பு சோகத்தில் இருக்கிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !