வாசகர்கள் கருத்துகள் (1)
ponmana chemmal
500 படங்களுக்கு மேல் நடித்த தேங்காய் சீனிவாசன் நடிப்பு மார்க்கெட் குறைந்ததும் தயாரிப்பாளராக மாறினார். 'கிருஷ்ணன் வந்தான்' என்ற படத்தை 1987ம் ஆண்டு தயாரித்தார். 'கண்ணன் வந்தான்' என்ற நாடகம்தான் அவரை சினிமாவுக்கு கொண்டு வந்தது. அதன் நினைவாக தான் தயாரித்த படத்திற்கு 'கிருஷ்ணன் வந்தான்' என்று டைட்டில் வைத்தார்.
இந்தப் படத்தில் சிவாஜி, கே.ஆர்.விஜயா, மோகன், ரேகா, நம்பியார், தங்கவேலு, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.விஜயன் இயக்கினார், இளையராஜா இசை அமைத்திருந்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த தேங்காய் சீனிவாசனால் படம் பாதியில் நின்றது. வீட்டை விற்றோ, அல்லது அடமானம் வைத்தோதான் படத்தை முடிக்க வேண்டிய நிலையில் இருந்தார். தீவிர எம்ஜிஆர் ஆதரவாளராக இருந்த தேங்காய் சீனிவாசன் எம்ஜிஆரை சந்தித்து தனது நிலையை கூறி உள்ளார்.
அப்போது எம்ஜிஆர் உன் குடிப்பழக்கத்தால் எல்லாவற்றையும் இழந்து விட்டாய். நான் எத்தனையோ முறை கண்டித்தும் நீ அந்த பழக்கத்தை விடவில்லை. குடிகாரர்களுக்கு நான் உதவி செய்வதில்லை என்று கண்டித்து அனுப்பி விட்டாராம்.
இதனால் கண்ணீரோடு வீடு வந்து சேர்ந்த தேங்காய் சீனிவாசனை வரவேற்றது எம்ஜிஆர் கொடுத்து அனுப்பி இருந்த 25 லட்சம் ரூபாய், இன்றைய மதிப்பில் 25 கோடிக்கும் அதிகமான மதிப்பை கொண்டது. எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வைத்து படத்தை முடித்தார். ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை.
ponmana chemmal