தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...!
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த வாரம் ஓடிடியில் விழாவைப் போன்று பல முக்கிய நடிகர்களின் படங்களும் வரிசைக்கட்டி நிற்கின்றன. அவை எந்தெந்த படங்கள் குறித்துத் தெரிந்து, தவறாமல் கண்டுகளியுங்கள்.
அங்கம்மாள்
நடிகை கீதா கைலாசம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ' அங்கம்மாள்'. வித்தியாசமான கதையுடன் வெளியான இந்த திரைப்படம், தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் நாளை(ஜன.9ம் தேதி) சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மாஸ்க்
நடிகர் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மாஸ்க்'. மணி ஹெயிஸ்ட் குறித்த திரைக்கதையுடன் வெளிவந்த இந்த திரைப்படம், நாளை(ஜன.9ம் தேதி) ஜீ5 மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகை ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.
அகாண்டா-2
தெலுங்கு வெளிவந்த அதிரடி மாஸ் திரைப்படம்'அகண்டா-2'. நடிகர் பாலையா ஆக்ரோஷமான நடிப்பில் வெளிவந்தது. முதல் பாகமான அகண்டா, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படமும் ரசிகர்களை மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் நாளை(ஜன.9ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சைலன்ட் ஸ்ரிமீஸ் தி லாஸ்ட் கேர்ள்ஸ் ஆப் தெலங்கானா
தெலுங்கில் உண்மையான நடந்த சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'Silent Screams the lost Girls of Telangana'. பெண்கள் காணாமல் போவது குறித்து கதைக்களம் அமைக்கப்பட்டி இருக்கும். இந்த தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்த திரைப்படம் இன்று (ஜன.8ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ராதேயா (Radheyaa)
கன்னட நடிகர் அஜய் ராவ் நடிப்பில் வெளிவந்த கிரைம் த்ரில்லர் படம் 'ராதேயா (Radheyaa)'. இந்த படம் இன்று (ஜன.8ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கான்ஸ்டபிள் கனகம்-2
நடிகை வர்ஷா பொல்லம்மா நடிப்பில் வெளிவந்துள்ள தொடர் 'கான்ஸ்டபிள் கனகம்'. பெண் காவலர் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் சீசன் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் இன்று (ஜன.8ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜிக்ரிஸ்
நண்பர்கள் சேர்ந்து ஜாலி ட்ரிப் போகும் போது, ஏற்படும் அனுபவங்களை காமெடி கலந்த பீல் குட் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் இன்று (ஜன.8ம் தேதி) சன் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
யெல்லோ (Yellow)
நடிகை பூர்ணிமா ரவி நடிப்பில், ஹரி மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ' யெல்லோ (Yellow). நடிகர் டெல்லி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று(ஜன.8ம் தேதி) வெளியாகியுள்ளது.