'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 (நாளை) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கலும் அதனால் ஏற்பட்டுள்ள தாமதமும் காரணமாக இந்த படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ல் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விஜய்க்கு கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உண்டு அந்த வகையில் இந்த பொங்கல் வெளியீடாக ரிலீசாகும் ஜனநாயகன், பராசக்தி ஆகிய படங்களுக்கு கேரளாவில் பெரிய அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால் மலையாள படங்களும் தங்களது ரிலீஸை தள்ளி வைத்திருந்தன.
இந்த நிலையில் தற்போது ஜனநாயகன் பட வெளியீடு தள்ளிப் போனதால் நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ள 'பெண்ணு கேஸ்' என்கிற திரைப்படத்தை தாங்கள் திட்டமிட்டதுக்கு ஒரு வாரம் முன்கூட்டியே ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை (ஜன 9) இந்தப் படத்திற்கான பிரிமியர் டிக்கெட் ஷோ நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் நிகிலா விமல் ஆண்களை திருமண மோசடி செய்து ஏமாற்றும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.