உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கலுக்கு வருகிறது திரவுபதி 2

பொங்கலுக்கு வருகிறது திரவுபதி 2

மோகன். ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ரக் ஷனா, நட்டி நடித்த திரவுபதி 2 படம் ஜனவரி மாத கடைசியில் வருவதாக இருந்தது. ஆனால், ஜனநாயகன், பராசக்தி சென்சார் குழப்பம், மற்றம் தியேட்டர்கள் கிடைத்த காரணத்தால் பொங்கல் தினத்தன்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

14ம் நுாற்றாண்டு கதை களத்தில் திரவுபதி 2 உருவாகி உள்ளது. இந்த படத்தில் போர் மற்றும் பல வரலாற்று உண்மை காட்சிகள் உள்ளன. இந்த பட விழாவில் பாடகி சின்மயி, திரவுபதி முதற்பாகத்தில் நடித்த ஷீலா ஆகியோருக்கு பதிலடி கொடுக்கப் போவதாக இயக்குனர் அறிவித்துள்ளார். அதனால், நாளை அதற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்மயி பாடிய எம்கோனே பாடலை படத்தில் இருந்து நீக்கி உள்ளதாக இயக்குனர் அறிவித்துவிட்டார். அந்த பாடலை யார் பாடியிருக்கிறார் என்ற விவரமும் நாளை வெளியாக வாய்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !