உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய், பிரபாஸை ஓவர்டேக் செய்த சாரா அர்ஜுன்

விஜய், பிரபாஸை ஓவர்டேக் செய்த சாரா அர்ஜுன்

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் சாரா அர்ஜூன். அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து, இவர் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். கடந்த மாதம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தில் கதாநாயகியாக யலினா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாரா. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்துள்ளதில் அந்த படத்தின் மூலம் சாரா அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் இந்திய அளவில் இன்னும் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் நட்சத்திரங்கள் யார் யார் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் எந்தெந்த இடங்களில் இருக்கிறார்கள் என ஐஎம்டிபி நிறுவனம் ஒரு பட்டியலை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் இரண்டாவது இடத்தில் இருந்த சாரா அர்ஜுன் இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளார். நடிகர் விஜய் எட்டாவது இடத்திலும், பிரபாஸ் 19வது இடத்திலும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்கள். துரந்தர் படத்தின் மூலம் கிடைத்த பிரபலம் தான் சாரா அர்ஜுனை இப்படி ரசிகர்களின் தேடலில் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !