உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்ற பிரபாஸ்

ரசிகர்களை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்ற பிரபாஸ்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் தெலுங்கில் மட்டுமல்லாது இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார். வெளிநாடுகளிலும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் நடித்துள்ள ராஜா சாப் திரைப்படம் இன்று (ஜனவரி 9) வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு தன்னை பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள் சிலரை சந்தித்து, அவர்களுடன் உரையாடி அனுப்பி வைத்துள்ளார் பிரபாஸ்.

இதுகுறித்து அவரை சந்தித்த ஸ்ரீலேகா என்கிற ரசிகை ஒருவர் பிரபாஸுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டு, “நாங்கள் அவரை சந்திக்க சென்றபோது வீட்டு காம்பவுண்ட் கேட்டுக்கே வந்து எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் பிரபாஸ். அந்த அளவிற்கு மிக எளிமையான மனிதராக இருந்தார். அவருக்கு நான் ஒரு சிறிய அளவிலான பகவத் கீதை புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தேன்.. மேலும் அவருக்கென சில பரிசு பொருட்களை சேர்த்து வைத்திருந்தேன். அதையும் அவரிடம் கொடுத்த போது அதை பெற்றுக்கொண்டு ஆர்வமாக வாங்கி பார்த்தார். இதைவிட ஒரு ரசிகைக்கு வேறு என்ன வேண்டும் ?” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !