ராஜ்குமார் பெரியசாமி படத்திற்காக ஸ்டைலிஷாக மாறும் தனுஷ்
ADDED : 2 days ago
போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள தனது 54 வது படத்தில் மூன்று மாதங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், அடுத்தபடியாக ரங்கூன், அமரன் படங்களை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 55 வது படத்தின் நடிப்பதற்கு தயாராகி விட்டார். இந்த படத்திற்காக ஓரளவு வெயிட் போட்டுள்ளது தனுஷ் தனது கெட்டப்பையும் ஸ்டைலிஷாக மாற்றி வருகிறார். அதோடு இந்த தனுஷ் 55வது படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில், இந்த படம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதையில் உருவாக இருப்பதாக கூறினார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் தனுஷை மீண்டும் சிக்ஸ் பேக் கெட்டப்புக்கு மாற்ற இருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.