உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது

ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் மற்றும் அமீர்கான் நடிக்கும் படங்களை இயக்கப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு டீசர் குறித்த படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இணைய பக்கத்தில் அல்லு அர்ஜுன் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கும், வெயிட் பார் இட் என்று ஒரு பதில் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் அல்லு அர்ஜூனின் 22 வது படத்தை தற்போது அட்லி இயக்கி வரும் நிலையில், அவரது 23 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக டோலிவுட்டியில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !