உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது

தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது

நடிகர் தனுஷ் தற்போது போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்துள்ளார். இது தனுஷின் 54வது படமாக உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மமிதா பைஜூ , கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ், ஜெயராம், சுராஜ் வெஞ்ராமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நடிகர், நடிகைகள் டப்பிங் பணிகளை தற்போது துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !